பெரெட்ஸ்வில் இல் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
57 வயதுடைய அந்த நபர் வலதுபுற வளைவில் வீதியோரத்திலும் வளைவு அடையாளத்திலும் மோதிய பின்னர், ஒரு மண் அணையில் விழுந்தார்.
காவல்துறை மற்றும் அவசர மருத்துவரின் உடனடி மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும், விபத்து நடந்த இடத்திலேயே ஓட்டுநர் இறந்தார்.
அந்த நபர் அதிக வேகத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
மூலம்- 20min