19.1 C
New York
Friday, June 20, 2025

ரயில் நிலைய தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய விசமிகள்.

மோர்ஜஸ் (VD) ரயில் நிலையத்திற்குப் பின்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில்,  பல ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டு தரையில் விழுத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை  இரவுக்கும் வியாழக்கிழமை அதிகாலைக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோர்ஜஸ் பிராந்திய காவல்துறையினர் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு உரிமையாளர் தகவல் அளித்ததை அடுத்து அங்கு சென்றதாக அவர்கள் கூறினர்.

19 ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டிருந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அந்த இடத்தில் சாட்சிகளோ, தடயங்களோ இல்லை, கண்காணிப்பு கமராக்களும் இருக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கண்மூடித்தனமான இந்தச் செயல்  மிகவும் பயங்கரமானது  என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாகனத்திற்கும் நூற்றுக்கணக்கான பிராங்குகள் சேதம் ஏற்படலாம் என்று கருதுவதாக காப்புறுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles