1.8 C
New York
Friday, February 13, 2026

சுவிசின் முக்கிய விமானத் தளம் மீது பறந்த வெளிநாட்டு ட்ரோன்கள்

சுவிட்சர்லாந்தின் மெய்ரிங்கன் விமானப் படைத்தளத்தின் மீது வெளிநாட்டு ட்ரோன்கள்  பறந்து வேவு பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து வாங்கத் திட்டமிட்டுள்ள  புதிய F-35 போர் விமானங்கள் மெய்ரிங்கன் விமானத் தளத்தில் இருந்தே செயற்படவுள்ளது.

இந்த நிலையில் ல் இராணுவ வீரர்கள் அங்கு மீண்டும் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்களை அவதானித்துள்ளனர்.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இராணுவத் தளங்கள் மீது பறக்கும் வெளிநாட்டு உளவு ட்ரோன்கள் குறித்து சுவிஸ் இராணுவம் இப்போது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் சுவிஸ் இராணுவத்திற்கு எதிராக உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று கருத வேண்டியிருப்பதாக  இராணுவ செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோஃபர் தெரிவித்துள்ளார்.

F-35 போர் விமானம் போன்ற “உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை” உளவு பார்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷ்ய உளவு அமைப்புகளிடம் இருந்து வருதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீன உளவு அமைப்புகளின் அச்சுறுத்தலையும் அவர் அதிகமாக மதிப்பீடு செய்துள்ளார்.

மினி-ட்ரோன்களின் வளர்ச்சி உளவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles