சூரிச்சின் மாவட்டம் 1 இல் உள்ள ஸ்டேடெல்ஹோஃபென் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையினால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
செவ்வாய் இரவு 11 மணி முதல் அந்தப் பகுதி முற்றிலும் இருளில் மூழ்கியது.
இதனால், டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை.
மின் தடையை உறுதிப்படுத்திய EWZ மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளது.
இரண்டு மணிநேரத்திற்குப் பின்னர் நேற்று அதிகாலையிலேயே மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
மூலம் – 20min.