19.5 C
New York
Monday, September 8, 2025

முன்னொரு போதும் இல்லாத வகையில் சூடாகிய நீர் நிலைகள்.

வெப்பமான வானிலை காரணமாக சுவிஸ் நீர்நிலைகள் கணிசமாக வெப்பமடைந்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில், ஏரிகளின் வெப்பநிலை சராசரியாக ஐந்து டிகிரி அதிகரித்துள்ளதாக, Meteonews வானிலை சேவையின் தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டைப் பாதித்து வரும் வெப்ப அலையே காரணமாகும்.

ஜெனீவா ஏரியின் வெப்பநிலை 26 டிகிரியாக உயர்ந்துள்ளது. ஜூன் நடுப்பகுதியை விட நான்கு டிகிரி அதிகமாகவும், கடந்த 41 ஆண்டுகளில் சராசரியை விட ஐந்து டிகிரி அதிகமாகவும் உள்ளது.

நியூசாடெல்  ஏரியின் வெப்பநிலை 25டிகிரியாக உயர்ந்துள்ளது.

பீல் ஏரி கடந்த மாதத்தை விட 6 டிகிரி வெப்பம்  அதிகரித்து 26 டிகிரியாக உள்ளது.

லுகானோ ஏரியில் 28 டிகிரி வெப்பம் பதிவானது. இது 41 ஆண்டு சராசரியை விட 5 டிகிரி அதிகம்.

சுவிட்சர்லாந்தில் ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக அதிக வெப்பமாக பதிவாகியுள்ளதாக MeteoSwiss தெரிவித்துள்ளது.

சென் காலன் மற்றும் கிளாரஸ்  கன்டோன்களில் உள்ள வேலன் ஏரியின்  வெப்பநிலை 25 டிகிரியாக உயர்ந்துள்ளது, இது 1983 முதல் 2024 வரையிலான சராசரியை விட 7 டிகிரி அதிகம்.

ஆறுகள் சாதாரண வெப்பநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க விலகல்களைக் காட்டின.

பெர்னுக்கு அருகிலுள்ள ஆரே, லூசெர்னுக்கு அருகிலுள்ள ரியஸ் மற்றும் லாஃபென்பர்க்கிற்கு அருகிலுள்ள ரைன் ஆகியவை  இதற்கு முன் இவ்வளவு வெப்பமாக இருந்ததில்லை.

வெப்பத்துடன், அதிக வெப்பநிலைக்கு வேறு காரணங்களும் இருப்பதாக Meteonews தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles