18.8 C
New York
Tuesday, September 9, 2025

அதிக வெப்பத்தினால் மூடப்பட்ட அணு உலைகள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பெஸ்னாவ் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகளும் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மூடப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை முதல் அலகின் செயற்பாட்டை Axpo ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தது.

புதன்கிழமை மாலை இரண்டாவது அலகையும்  நிறுவனம் நிறுத்தியுள்ளது.

டோட்டிங்கனில் உள்ள மின் நிலையத்திற்கு, குளிரூட்டும் நீரை வழங்கும் ஆரே நதியில் அதிக வெப்பநிலை காரணமாக, இரண்டு உலைகளின் உற்பத்தியை நிறுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பெஸ்னாவ் மின் உற்பத்தி நிலையத்தை தற்காலிகமாக மூடுவது மின்சார விநியோகத்தின் பாதுகாப்பிற்கோ அல்லது பெஸ்னாவ் உலைகளின் பாதுகாப்பிற்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று Axpo மேலும் கூறுகிறது.

தற்போது வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள ஆற்றின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.

மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாடு நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles