-0.7 C
New York
Sunday, December 28, 2025

சூரிச் ஏரியை நீந்திக் கடக்கும் போட்டி – 9 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சூரிச் ஏரியை நீந்திக் கடக்கும் போட்டி  புதன்கிழமை நடைபெற்றது. 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 9,196 பொழுதுபோக்கு விளையாட்டு வீரர்கள் ஏரியில் நீந்திச் சென்றனர்.

2018 ஆம் ஆண்டு டிக்கட் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து முதல் முறையாக இந்த நிகழ்வுக்கு முன்னரே டிக்கட் விற்றுத் தீர்ந்துவிட்டதாக,  ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இதில் பங்கேற்ற 9,196 விளையாட்டு வீரர்களில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 196 இளையோரும் அடங்குவர்.

மைதென்குவாயிலிருந்து டைஃபென்ப்ரூனென் வரை நீந்திக் கடக்கும் தூரம் 1,500 மீட்டர்  ஆகும்.

நீச்சல் வீரர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு 50 முதல் 70 மீட்டருக்கும் உயிர்காப்பாளர்களுடன் படகுகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

முதல் ஏரி கடக்கும்  போட்டி 1985 இல் நடந்தது. அதன் பிறகு, கிட்டத்தட்ட 160,000 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles