பிரெஸ்-வெர்ஸ்-நோரியாஸில் உள்ள ரூட் டி பேயர்னில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
புதன்கிழமை மாலை 4:25 மணியளவில், 23 வயது நபர் ஒருவர் கிராண்ட்சிவாஸிலிருந்து பிரெஸ்-வெர்ஸ்-நோரியாஸ் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரண்டு வாகனங்களுடன் நேருக்கு நேர் மோதினார்.
இந்த விபத்தில், 23 வயது நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மற்றொரு காரின் சாரதியும் காயம் அடைந்தார்.
சிறிது நேரம் கழித்து டோம்டிடியரிலும் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது.
டோம்பியர் கிராமத்திலிருந்து டோம்டிடியரை நோக்கி 20 வயது பெண் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, 39 வயது பெண் ஓட்டிச் சென்ற காருடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20 வயது பெண் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மற்றைய காரில் பயணித்த 43 வயதுடைய ஒருவர் மற்றும், 3 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மூலம் –20min.