அமெரிக்காவில் விமானப் பயணிகள் இனி தங்கள் காலணிகளை கழற்ற வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2001 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இப்போது காலாவதியாகியுள்ளது.
நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் காலணி சோதனையை காலாவதியானதாக ஆக்குகின்றன என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வொஷிங்டன் விமான நிலையத்தில் அறிவித்தார்
இந்த விதிமுறை சுவிஸ் விமான நிலையங்களிலும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பயணிகள் தங்கள் காலணிகளை கழற்ற வேண்டிய அவசியமில்லை என்று, விமான நிலைய பேச்சாளர் லிவியா கலுவோரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனிப்பட்ட சந்தர்ப்பங்களில், பாதுகாப்புப் பணியாளர்கள் அத்தகைய உத்தரவை பிறப்பிக்கலாம் – எடுத்துக்காட்டாக, காலணிகளில் உலோக கொக்கிகள், தடிமனான குதிகால் அல்லது பிற வெளிப்படையான கூறுகள் இருந்தால். அவ்வாறு கோரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min

