ரைன்ஃபெல்டன் பழைய நகரத்தில் நகைக் கடைக்குள் முகமூடி அணிந்த ஒருவர் கத்தியுடன் நுழைந்து கொள்ளையிட முயன்றவர், வழிப்போக்கர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பின்னர் தப்பிக்க முயன்றபோது, பல வழிப்போக்கர்களால் பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பொலிசார் வரும் வரை தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் ஆர்காவ் கன்டோனல் பொலிசார் 44 வயதான இத்தாலியரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் சிறிய காயம் அடைந்தார்.
மூலம்- bluewin