சூரிச் கன்டோனில், Affoltern am Albis அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுவிஸ் நிலநடுக்கவியல் சேவை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3:42 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது சுமார் 3.1 ஆக பதிவாகியது.
சில நாட்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்தை 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நேரத்தில், அது பெர்ன் கன்டோனில் உள்ள முர்ரனுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

