16.6 C
New York
Thursday, September 11, 2025

தீக்கிரையான மருத்துவமனை- பெர்னில் புகைமூட்டம்.

திங்கட்கிழமை காலை காலை 11:10 மணியளவில்,  லாங்காஸ் அருகே பாரிய தீவிபத்து ஏற்பட்டதால், பெர்ன் நகரில்  பெரிய புகைமூட்டம் காணப்பட்டது.

பெர்ன் பல்கலைக்கழக கால்நடை மருத்துவமனையின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை பெர்ன் காவல்துறை உறுதிப்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் மக்களோ விலங்குகளோ காயமடையவில்லை, ஆனால் குறிப்பிடத்தக்க சொத்து சேதம் ஏற்பட்டது.

விலங்கு மருத்துவமனையின் பல ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மீன் மற்றும் வனவிலங்கு சுகாதார நிறுவனம் அமைந்துள்ள விலங்கு மருத்துவமனையின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் யாரும் இருக்கவில்லை. பாதிக்கப்பட்ட கட்டிடம் முற்றிலுமாக அழிந்து போயுள்ளது.

அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் கடுமையான வெப்பம் மற்றும் புகையால் சேதமடைந்தன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles