ஞாயிற்றுக்கிழமை டோம்ஜோச் அருகே சாஸ்-ஃபீயில் ஒரு மோசமான பாராகிளைடிங் விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளாகி விழுந்தவருடனான தொடர்பை இழந்ததால், அவரது நண்பர், வலைஸ் கன்டோனல் மீட்பு சேவைகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதன் போது காணாமல் போன பாராகிளைடர் விமானியின் உடலை திங்கள்கிழமை காலை சுமார் 8:30 மணியளவில் கண்டுபிடித்தனர்.
அந்த நபரின் சடலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் இருந்து மீட்கப்பட்டது.
மூலம்- 20min.