சூரிச் விமான நிலையத்திலிருந்து நேற்றுக்காலை கிரீஸ் செல்லும் எடெல்வைஸ் விமானம், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
விமானம் ஓடுபாதை 28 இல் கிழக்கிலிருந்து வேகமாகச் செல்வதையும், மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதையும் Flightradar24 காட்டுகிறது.
ஒரு விசித்திரமான சத்தம் கேட்டதை அடுத்து, விமானம் திடீரென நிறுத்தப்பட்டு விமான நிலையத்தில் உள்ள தரிப்பிடத்திற்கு திரும்பியது.
புறப்படும் போது இரண்டு இயந்திரங்களிலும் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றியதாகவும். இதனால் புறப்படுவது நிறுத்தப்பட்டதாகவும், எடெல்வைஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் அல்லது பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஏர்பஸ் A320 விமானம் காலை 10:45 மணிக்கு புறப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் கழித்து கிரேக்க தீவான கோஸில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூரிச்சிலிருந்து கோஸுக்கு ஒரு மாற்று விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
மூலம்- 20min.