ரோபோக்களின் உதவியுடன் பார்சல்களை விநியோகிக்கும் பரீட்சார்த்த முயற்சியில் சுவிஸ் போஸ்ட் இறங்கியுள்ளது.
அதிக பொருட்களை விநியோகிக்கும் சுமையிலிருந்து ஊழியர்களை விடுவிக்க முடியும் என சுவிஸ் போஸ்ட் நம்புகிறது.
சில்லறை விற்பனையாளர் Migros Online மற்றும் the Zurich start-up RIVR உடன் இணைந்து ரோபோக்களின் பயன்பாட்டை தற்போது அது சோதித்து வருகிறது.
சுவிஸ் போஸ்ட் சமீபத்தில் சூரிச்சில் உள்ள ரெஜென்ஸ்டார்ஃப் நகரில் தனிப்பட்ட சரக்குகளை விநியோகிக்கும் ரோபோக்களின் பயன்பாட்டை சோதித்தது.
ரோபோ நன்றாகவும், விரைவாகவும் படிக்கட்டுகளில் ஏறி பொருட்களை சேதப்படுத்தாமல் வாகனத்தில் ஏறி இறங்க முடியும் என்பதை தீர்மானிக்க சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக நான்கு கால் ரோபோவை சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னலஜி ETH சூரிச் ஸ்பின்-ஒவ் RIVR உருவாக்கியது.
சோதனைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை தனிப்பட்ட நாட்களில் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் சுவிஸ் போஸ்ட் முடிவுகளை பகுப்பாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.
இருப்பினும், எதிர்காலத்தில் பார்சல் விநியோகத்திற்கு மனிதர்கள் இன்றியமையாதவர்களாக இருப்பார்கள் என்று சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo