லொசானில் சனிக்கிழமை இரவு பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று ஓட்டிச் செல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் சிறிய காயமடைந்ததை அடுத்து, சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் சட்டமா அதிபர் அலுவலகம் ஓட்டுநர் மீது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
லொசானில் வசிக்கும் 56 வயதான அந்த நபர், புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தற்போது தயாராக இருப்பதாக லொசானில் நகர பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பின்னர் அவர் சட்டமா அதிபர் அலுவலகத்தால் விசாரிக்கப்படுவார்.
மூலம்- swissinfo