இ-ஸ்கூட்டர் விபத்தில் வீதியில் விழுந்தவர் கார் மோதி பலியாகியுள்ளார்.
57 வயது நபர் ஒருவர் கெம்ப்ட்டால்ஸ்ட்ராஸ் வழியாக ஹின்வில் நோக்கிச் செல்லும் பைக் பாதையில் மின்-ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்திற்குள்ளாகி வீதியில் விழுந்தார்.
24 வயது ஓட்டுநர் ஒருவர் கெம்ப்ட்டால்ஸ்ட்ராஸில் ஃபெஹ்ரால்டோர்ஃப் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தரையில் விழுந்த நபரைக் கவனிக்காமல் அவர் மீது மோதியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இன்று அதிகாலை 1:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூலம்- 20min.

