சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் தலைமையிலான குழுவே இனி அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் புதன்கிழமை நியூயோர்க்கில் இதனை உறுதிப்படுத்தினார்.
இப்போது வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு பார்மெலின் தான் பொறுப்பு என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்க வைப்பதற்கு கெல்லர்-சுட்டர் முன்னர் தவறிவிட்டார்.
இருவருக்கும் இடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு ஒரு ஒப்பந்தத்தின் முறிவுக்குத் தூண்டியதாக நம்பப்படுகிறது.
கெல்லர் சுட்டரால், டிரம்ப் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக அமெரிக்க உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் விளைவாக, கெல்லர்-சுட்டர் பதவியில் இருக்கும் வரை அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தனது ஊழியர்களிடம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதம், கெல்லர்-சுட்டர் வரிகளைத் தவிர்க்க வொஷிங்டனுக்குச் சென்றார். ஆனால் அவர் வெள்ளை மாளிகைக்குள் அழைக்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பதிலாக, வர்த்தக பிரச்சினைகளுக்குக் கூட பொறுப்பேற்காத வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் மட்டுமே அவருக்கு சந்திப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் அவர் அமெரிக்காவுடனான பேச்சுக்களில் இருந்து விலகி, அமைச்சர் கை பர்மெலின் இனி அதனை கையாளுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

