செப்டம்பர் மாதத்தில் மூன்று வார வேட்டைக்காலத்தில் கிராபுண்டன் மாகாணத்தின் வேட்டைக்காரர்கள் சுமார் 3,500 விலங்குகளை சுட்டுக் கொன்றுள்ளதாக வேட்டை மற்றும் மீன்பிடித்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது,
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மான்கள் அதிகளவில் வேட்டையாடப்பட்டுள்ளன என்று வேட்டை மற்றும் மீன்பிடித்தல் அலுவலகத்தைச் சேர்ந்த லூகாஸ் வால்சர் கூறினார்.
ரோ மான் வேட்டை சராசரியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2,500 முதல் 2,600 விலங்குகள் வரை, சுட்டுக் கொல்லப்பட்ட, 2024 ஐ விட சற்று அதிகமாக- இம்முறை விலங்கு வேட்டை இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தின் வேட்டைத் திட்டங்கள் 4,835 மான்களை சுடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சுடப்பட வேண்டிய விலங்குகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு வேட்டையின் போது வேட்டையாடப்படும்.
மூலம்- swissinfo

