இஸ்ரேலில் உள்ள சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த ஒரு குழு நேற்று, தென்பகுதியில் உள்ள Ktzi’ot சிறையில் உள்ள காசா கப்பல் உதவி அணியை சேர்ந்த 19 சுவிஸ் ஆர்வலர்களைப் பார்வையிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டினரின் தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே தூதரக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
இஸ்ரேலில் அந்த இடத்தைப் பார்வையிட்ட முதல் வெளிநாட்டு குழுக்களில் இதுவும் ஒன்று என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தக் குழு சுமார் எட்டு மணி நேரம் அந்த இடத்திலேயே இருந்தது. பல்வேறு சம்பவங்கள் காரணமாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் வருகையை நிறுத்தினர்.
இதன் விளைவாக சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் சுவிஸ் நாட்டவர்கள் குழுவுடன் ஆழமான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தூதரகம் மற்றொரு பயணத்தை திட்டமிட்டுள்ளது.
மூலம்- swissinfo

