அமி எனப் பெயரிடப்பட்டுள்ள புயல்,ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில், ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகளை எழுப்பியுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.
விமான மற்றும் ரயில் போக்குவரத்துகளும் முடங்கின.
வடக்கு பிரான்சில் பலத்த காற்றுடன் வீசிய அமி புயலினால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்திலும், இந்தப் புயற்காற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
விமானங்கள் புறப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் இந்த புயலினால் சுவிசில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மூலம்-20min.

