44 வயதான சுவிஸ் நபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து கோகோயின் கடத்தி வந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் நேற்று ஓபெரென்ட்ஃபெல்டனில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது காரை சோதனை செய்தபோது, புலனாய்வாளர்கள் மூன்று கிலோ கிராம்களுக்கும் அதிகமான கோகோயினை கண்டுபிடித்தனர்.
இது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சூரிச் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- swissinfo

