-0.1 C
New York
Sunday, December 28, 2025

இஸ்ரேலில் விலங்குகளை போல நடத்தப்பட்டோம்- முன்னாள் ஜெனீவா மேயர்.

காசா உதவி கப்பல் அணியில் பங்கேற்று இஸ்ரேலியால் விடுவிக்கப்பட்ட கடைசி பத்து சுவிஸ் நாட்டவர்களில்  ஒன்பது பேர் நேற்று ஜெனீவாவில் தரையிறங்கினர்.

அதே நேரத்தில் பத்தாவது நபரான துருக்கிய இரட்டை குடியுரிமை கொண்டவர்  செவ்வாய்க்கிழமை துருக்கியை அடைந்தார்.

ஜெனீவா விமான நிலையத்தில், சுமார் 300 பேர்  ஒன்பது சுவிஸ் ஆர்வலர்களையும் வரவேற்றனர்.

அவர்கள் ஆதரவு அடையாளங்களை ஏந்தியபடி ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

ஜெனீவாவின் முன்னாள் மேயரான ரெமி பகானியும், அவர்களில் ஒருவர்.அவர் வரவேற்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“நீங்கள் இல்லா விட்டால், நாங்கள் இன்னும் அங்கேயே இருப்போம், விலங்குகளைப் போல நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்போம். 23 சதுர மீட்டரில் நாங்கள் 14 பேர் அடைக்கப்பட்டிருந்தோம்” என்று ரெமி பகானி கூறினார்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles