சூரிச்சில் உள்ள Pfäffikon இல் இன்று அதிகாலை 4:30 மணியளவில் விநியோக வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஃபெஹ்ரால்டோர்ஃப்பில் இருந்து ஃபாஃபிகான் நோக்கி தனது விநியோக வாகனத்தை ஓட்டிச் சென்றவர், எதிரே வந்த பாதையில் சென்று வீதியின் இடது பக்கத்திலிருந்து விலகி, ஒரு மரத்தில் மோதியுள்ளார்.
அவசர உதவியாளர்கள் வாகனத்திற்குள் ஓட்டுநர் மயக்கமடைந்ததைக் கண்டறிந்து, துணை மருத்துவர்கள் வரும் வரை முதலுதவி அளித்தனர்.
இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.

