சுவிஸ் நகரமான டெலிமாண்டில் நவம்பர் மாதத்தில் புதிய சாதனை வெப்பநிலையாக 23.5 டிகிரி வெப்ப நிலை நேற்று பதிவாகியுள்ளது.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு நவம்பரில் அதிகபட்ச வெப்பநிலை 22.8 டிகிரியாக இருந்ததாக மெட்டியோநியூஸ் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகலில், லா பிரெவின் 18.3 டிகிரி மற்றும் ஜெனீவா 18.5 டிகிரி என பல இடங்களில் வெப்பநிலை 20 டிகிரிக்கு அருகில் இருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை மிதமான வெப்பநிலையை வானிலை மையங்கள் கணித்துள்ளன. இவை ஆண்டின் குறிப்பிட்ட காலத்திற்கு “விதிவிலக்காக அதிகமாக” உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

