போர்த் தளபாடங்களின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதிகளை எளிதாக்குவதற்கு சுவிஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
செனட் முன்னர் தீர்மானித்த தளர்வுகளை, பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது. இதற்கு ஆதவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஒரு நாடு மோதலில் ஈடுபட்டாலோ அல்லது மனித உரிமைகளை கடுமையாக மீறினாலோ தற்போது அனைத்து விற்பனையையும் தடை செய்யும் நாடாளுமன்றத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அங்கீகார அளவுகோல்களிலிருந்து விலக அனுமதிக்கும் ஒரு சீர்திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தளர்வுகளை பாராளுமன்றம் ஆதரித்தது.
திருத்தங்கள் நடுநிலைமைச் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை என்று பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் உறுதியளித்தார். கூடுதலாக, ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் முன்பு நலன்கள் பரிசீலிக்கப்படும்.
மூலம்- swissinfo

