சோலோதர்ன் கன்டோனில் ஆராவ்ர்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள ஓல்டனில் ஒருவர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சனிக்கிழமை இரவு 11:35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 53 வயதான சுவிஸ் நபர், சோலோதர்ன் கன்டோனல் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றத்தின் சூழ்நிலைகள் மற்றும் பின்னணி குறித்து கன்டோனல் பொலிஸ் மற்றும் சோலோதர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் என்பன விசாரணையைத் தொடங்கியுள்ளன.
மூலம்- 20min

