-0.2 C
New York
Tuesday, December 30, 2025

கல்விக் கட்டணத்தை உயர்த்தும் சுவிஸ் பல்கலைக்கழகங்கள்.

அதிகரித்து வரும் பற்றாக்குறையைச் சமாளிக்க பல சுவிஸ் பல்கலைக்கழகங்கள் அடுத்த ஆண்டு கல்விக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளன. 2027 முதல் கூட்டாட்சி அரசின் மானியங்களில் திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்களே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

கன்டோனல் பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் 120 மில்லியன் பிராங்குகளும், சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னொலஜிக்கு (ETH சூரிச் மற்றும் லௌசானில் உள்ள EPFL) 78 மில்லியன் பிராங்குகளும் நிதி குறைக்கப்படும்.

2025 ஆம் ஆண்டில் ETH சூரிச் மற்றும் EPFL வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு செமஸ்டருக்கு 2,190 பிராங் ஆக -மூன்று மடங்காக உயர்த்தின.

அத்துடன் 55 மில்லியன் பிராங் பற்றாக்குறையை எதிர்கொண்ட பெர்ன் பல்கலைக்கழகம், சில படிப்புகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

பெர்னில் உள்ள பயன்பாட்டு விஞ்ஞான மற்றும் கலை பல்கலைக்கழகம் சுவிஸ் மாணவர்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 850 பிராங்கும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 2,350 பிராங் வரையும் கட்டணங்களை அதிகரித்துள்ளது.

சென் காலனில் அதிகரிப்பு 7% ஆக இருக்கும். அங்கு செமஸ்டருக்கு சுவிஸ் மாணவர்களுக்கு 1,310 பிராங்கும் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு 3,300 பிராங்கும் கட்டணம் அறவிடப்படும்.

Università della Svizzera italiana (USI) ஏற்கனவே அதிக கட்டணங்களை (2000/4000 பிராங்) என்ற அடிப்படையில் அறவிட்டு வருகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles