சூரிச்சின் மெய்லனில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில், மெய்லனில் உள்ள சீஸ்ட்ராஸ்ஸில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சூரிச்சின் ராப்பர்ஸ்வில்லில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு தாய் தனது குழந்தையுடன் எதிர் திசையில் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார்.
இதன் போது ஒரு கார் எதிரே வந்த பாதையில் திரும்பி மற்ற வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.
போர்ஷே காரில் இருந்த அனைவரும் அம்புலன்ஸ் மூலம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வால்வோவில் இருந்த தாயும் அவரது குழந்தையும் காயமின்றி தப்பினர்.
மூலம்- 20min

