கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 119 பேரில் 113 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 71 பேர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 பேர் பிரான்சைச் சேர்ந்தவர்கள், 11 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் மற்றும் நான்கு பேர் செர்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் காயமடைந்த தலா ஒருவர் போஸ்னியா, போலந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், போலந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைய்ஸ் கன்டோனல் காவல்துறையின் தளபதி ஃபிரெடெரிக் கிஸ்லர் இதை அறிவித்துள்ளார்.
அதேவேளை புத்தாண்டு தினத்தன்று கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்த மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாலைஸ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பலியானவர்கள் 24 மற்றும் 22 வயதுடைய இரண்டு சுவிஸ் பெண்கள் மற்றும் 21 மற்றும் 18 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்கள் ஆவர்.
இதுவரை, இறந்த எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

