7.5 C
New York
Thursday, January 15, 2026

கிரான்ஸ்-மொன்டானா துயரத்திற்கு இலங்கை அரசு இரங்கல்.

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மனவலிமையுடன் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டுகிறேன்.

இந்த தருணத்தில், சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் இலங்கை கொண்டுள்ள ஒற்றுமையையும் ஆதரவையும் நான் மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles