27.9 C
New York
Sunday, June 28, 2026

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் சொத்துக்களை முடக்கியது சுவிஸ் அரசு.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் தொடர்புள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தையும் உடனடியாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்து முடக்கம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை, 4 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஏதேனும் சொத்துகள் சட்ட விரோதமானவை என்று தெரிய வந்தால், அவை வெனிசுலா மக்களுக்கு பயன்படும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், சட்ட விரோதமாக சம்பாதித்த எந்தவொரு சொத்தையும், சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியே மாற்ற முடியாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புகிறோம் என்றும் சுவிஸ் அரசுஅறிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles