21.8 C
New York
Friday, June 19, 2026

டாவோஸ் வருவதற்கு ட்ரம்பிற்கு தடைவிதிக்க கோரும் பசுமைக் கட்சி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு வாரங்களில் , டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

வெனிசுலா அதிபர் மதுரோவைக் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் லிசா மஸ்ஸோன், டிரம்பை விரும்பத்தகாத நபராக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் டாவோசிற்கு பயணிக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரோவைக் கைது செய்த நடவடிக்கையால் அவர் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

எனினும் SVP வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஃபிரான்ஸ் க்ரூட்டர் இந்தக் கோரிக்கையை பொருத்தமற்றதெனக் கூறுகிறார்.

சுவிஸ் வெளியுறவு அமைச்சும் ட்ரம்பிக் நுழைவுக்குத் தடை விதிப்பதற்கு எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை என தெரிவித்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles