சுவிட்சர்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுங்க ஒப்பந்தம் இருந்தபோதிலும், அமெரிக்க இறைச்சி சுவிஸ் சூப்பர் மார்க்கெட்களுக்கு வர வாய்ப்பில்லை என்று AWP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர். ஆனால் உணவகத் துறையினர் இவற்றில் ஆர்வம் காட்டி வருகிறது.
புதிய விதிகள் அமுலுக்கு வந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு இறுதி வரை, சுவிட்சர்லாந்து அமெரிக்காவிலிருந்து 20.3 தொன் மாட்டிறைச்சி மற்றும் 2.3 தொன் பைசன் ஆகியவற்றை இறக்குமதி செய்துள்ளது.
ஆனால் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படவில்லை என மத்திய சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு சேவையின் முதற்கட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சுவிஸ் இறைச்சி முன்னுரிமையாக உள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று மிக்ரோஸ் மற்றும் கூப் என்பன அறிவித்துள்ளன.லிட்ல் மற்றும் ஆல்டியும் இதே கருத்தை வெளியிட்டுள்ளன.

