கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை, பாப்பரசர் லியோ XIV நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் நடந்த இந்த தனிப்பட்ட சந்திப்பில், பாதிக்கப்பட்டவர்களின் சுமார் 20 உறவினர்கள், கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாப்பரசர் ஆறுதல் தெரிவித்ததுள்ளார்.
40 பேர் கொல்லப்பட்டு 116 பேர் காயமடைந்த அனர்த்தம் நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் துக்கமடைந்த அன்புக்குரியவர்களைச் சந்திப்பதில் “மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன்” என்று பாப்பரசர் கூறினார்.
“இன்று நான் உங்களிடம் உரையாற்றும் பாசமும் இரக்க வார்த்தைகளும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் சக்தியற்றதாகவும் தெரிகிறது” ஆனால் “உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை” என்று அவர் தனிப்பட்ட சந்திப்பின் போது அவர்களிடம் கூறினார் என்று வத்திக்கான் வெளியிட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நமக்குள் வாழும் நம்பிக்கை, நம் வாழ்வின் இருண்ட மற்றும் மிகவும் வேதனையான தருணங்களை ஈடுசெய்ய முடியாத ஒளியால் ஒளிரச் செய்கிறது, நமது இலக்கை நோக்கி தைரியமாக தொடர்ந்து செல்ல உதவுகிறது”. “நீங்கள் மீண்டும் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்”, என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
மூலம்- swissinfo

