20.3 C
New York
Wednesday, September 2, 2026

பார் உரிமையாளருக்குப் பிணை – இத்தாலி கடும் எதிர்ப்பு.

கிரான்ஸ்-மொன்டானாவில் தீவிபத்திற்குள்ளான லு கொன்ஸ்டெல்லேஷன் பார் உரிமையாளரை விசாரணைக்கு முந்தைய காவலில் இருந்து விடுவிப்பதற்கான வலைஸ் நீதிமன்றத்தின் முடிவிற்கு இத்தாலிய அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திற்கான இத்தாலிய தூதுவரை ரோமுக்கு திரும்ப அழைத்துள்ளது.

- Advertisement -

நீதிமன்றத்தின் முடிவு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான அவமானத்தையும் மேலும் வேதனையையும் அளிக்கிறது என்று இத்தாலிய அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ஆகியோர் தூதுவர் ஜியான் லோரென்சோ கார்னாடோவை ரோமுக்கு அழைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, நீதிமன்றம் பார் உரிமையாளர் ஜக் மோரெட்டியை 200,000 பிராங் பிணையில் விடுவிக்க முடிவு செய்தது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மெலோனி ஏற்கனவே சமூக ஊடகங்கள் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles