19 C
New York
Friday, May 15, 2026

ஆறு புதிய தேசிய ஆராய்ச்சி திறன் மையங்களை அமைக்கிறது சுவிஸ்

அதிநவீன ஆராய்ச்சியை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து ஆறு புதிய தேசிய ஆராய்ச்சி திறன் மையங்களை (NCCRs) தொடங்கவுள்ளது.

2026 மற்றும் 2029 க்கு இடையில் 98.7 மில்லியன் பிராங் நிதி உதவியுடன் இவை அமைக்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட்ட 75 க்கும் மேற்பட்ட திட்டங்களிலிருந்து, சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளையுடன் இணைந்து, அரசாங்கத்தால் ஆறு புதிய ஆராய்ச்சிப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மத்தியத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுவிஸ் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

வசந்த காலத்தில் தொடங்கும் NCCRகள், பாசல், பெர்ன், லொசேன் மற்றும் சூரிச் பல்கலைக்கழகங்கள், லொசேன் மற்றும் சூரிச்சில் உள்ள பெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னொலஜி மற்றும் போல் ஷெரர் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டியங்கும்.

பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டாட்சி நிதிகளுடன் பொருந்தக்கூடிய கூடுதல் நிதியை வழங்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles