4.8 C
New York
Sunday, March 29, 2026

கூப்-ப்ரோன்டோ கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை.

சோலோதர்ன் மாகாணத்தில் உள்ள டல்லிகெனில் உள்ள கூப்-ப்ரோன்டோ பெட்ரோல் நிலையக் கடையில், திங்கள்கிழமை மாலை துப்பாக்கி முனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு முன்னர், இந்தக் கொள்ளை சம்பவம் நடந்தது. முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய ஒருவர் கடைக்குள் நுழைந்து ஒரு ஊழியரிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் பல நூறு பிராங்குகளுடன் கடையை விட்டு வெளியேறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.

மூலம்-20min.

Related Articles

Latest Articles