18 C
New York
Tuesday, March 31, 2026

அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு சடலங்கள் மீட்பு!

க்னோஸ்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 3 மணியளவில், இரண்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆணும், ஒரு பெண்ணுமே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை என்று டிசினோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் நிகழ்வுகளின் வரிசை குறித்த விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்தவர்கள் பற்றியோ, அவர்களின் உறவு நிலை பற்றியோ பொலிஸ் தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles