14.5 C
New York
Monday, September 28, 2026

பெர்ன் நகைக்கடையில் கொள்ளை.

பெர்னில் உள்ள பர்க்டார்ஃப் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு நகைக் கடையில் சனிக்கிழமை காலை கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஆண்கள் ஒரு பெண் விற்பனையாளரை தாக்கி காயப்படுத்திய பி்ன்னர், பல நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

- Advertisement -

சனிக்கிழமை காலை 11:20 மணியளவில், வாடிக்கையாளராகக் காட்டிக் கொண்ட ஒரு நபர் நகைக் கடைக்குள் நுழைந்த போது, முகமூடி அணிந்த ஒருவர் உடனடியாக அவரைப் பின்தொடர்ந்துள்ளார்.

இரண்டு ஆண்களும் ஒன்றாக கவுண்டருக்குப் பின்னால் இருந்து நகைகளைப் பறித்ததுடன், பெண் விற்பனையாளரை கீழே தள்ளி,காயப்படுத்தினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பெர்ன் கன்டோனல் பொலிசார் இப்போது சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles