26.6 C
New York
Friday, September 4, 2026

இடம் இல்லாததால் 10 குரங்குகளை கொலை செய்த சூரிச் மிருகக்காட்சிசாலை.

சூரிச் மிருகக்காட்சிசாலையில் இடம் இல்லாததால், பத்து ஆரோக்கியமான ஜெலடா குரங்குகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன – இது ஒரு சோகமான நிகழ்வாயினும், அவசியமான நடவடிக்கை என மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

குரங்குகள் குழுவிற்குள் அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், ஐரோப்பா முழுவதும் உள்ள பிற மிருகக்காட்சிசாலைகளில் இடம் கிடைக்காததாலும் சூரிச் மிருகக்காட்சிசாலை விலங்குகளை கருணைக்கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

- Advertisement -

பல்வேறு வயதுடைய குரங்குகள் கொலை செய்யப்பட்டுள்ளன.

குரங்குகள் குழுவின் நீண்டகால ஆரோக்கியத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்றும், குரங்குகளின் எண்ணிக்கை சமீபத்தில் 48 ஆக உயர்ந்துள்ளது என்றும், மிருகக்காட்சிசாலை இயக்குனர் செவெரின் டிரெசென் தெரிவித்துள்ளார்.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles