5.8 C
New York
Friday, April 10, 2026

ஐரோப்பிய துறைமுகக் கூட்டமைப்பில் சேர விரும்பும் சுவிட்சர்லாந்து.

ரைன் நதிக்கரையில் உள்ள பாசல் துறைமுகத்தை, ஐரோப்பிய துறைமுகக் கூட்டமைப்பில் சேர்க்க சுவிட்சர்லாந்து, விரும்புகிறது.

இந்த நடவடிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு “முக்கியமான அடித்தளமாக” இருக்கும் என்று சுவிஸ் நீதித்துறை அமைச்சர் பீட் ஜோன்ஸ் கூறினார்.

அவர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பெல்ஜியத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்தார். துறைமுகக் கூட்டமைப்பில் பங்கேற்பதற்கு ஜோன்ஸ் மூன்று காரணங்களைக் கூறினார்.

முதலாவதாக, மற்ற நாடுகளுடன் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது. இரண்டாவதாக, பங்கேற்கும் உறுப்பினர்கள் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். மூன்றாவது காரணம், சீரான தரநிலைகளை உருவாக்குவதாகும்.

பாசல்-சிட்டி மற்றும் பாசல்-கண்ட்ரி ஆகிய மாகாணங்கள், சுவிஸ் ரைன் நதிக்கரையில் உள்ள “சுவிட்சர்லாந்து துறைமுகத்தின்” இணை உரிமையாளர்களாக உள்ளன. இரு மாகாணங்களும் கூட்டமைப்பில் இணைவதை ஆதரிக்கின்றன.

ஐரோப்பிய துறைமுகக் கூட்டமைப்பில் சுமார் 50 துறைமுகங்கள் உட்பட ஏறத்தாழ 200 உறுப்பினர்கள் உள்ளனர்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles