8.9 C
New York
Monday, April 13, 2026

ஹங்கேரியில் 16 ஆண்டு ஓர்பானின் ஆட்சியை வீழ்த்தினார் பீற்றர் மாக்யார்.

ஹங்கேரியில், விக்டர் ஓர்பானின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில்,  பதிவாகிய 98 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்,  பீற்றர் மாக்யார்  தலைமையிலான டிஸ்ஸா கட்சி 138 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

பிரதமர் ஓர்பானின் ஃபிடெஸ் கட்சி 55 இடங்களையும், தீவிர வலதுசாரியான ‘நமது தாய்நாடு’ கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பல ஆண்டுகளாகப் பரவலாகி விட்ட உறவுமுறைச் சார்பு மற்றும் ஊழல்களால் சலித்துப்போன ஹங்கேரியர்களை ஒன்று திரட்டுவதற்காக பீற்றர் மாக்யார் இரண்டு ஆண்டுகளாக, கடும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

ஜனநாயக ஹங்கேரியின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு அதிகமான மக்கள் வாக்களித்ததில்லை – மேலும் எந்தவொரு கட்சியும் இவ்வளவு வலுவான மக்கள் ஆணையைப் பெற்றதில்லை, என்று, பீற்றல் மாக்யார் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான நான்கு தேர்தல் வெற்றிகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஓர்பானின் 16 ஆண்டு கால ஆட்சி,, இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.

Related Articles

Latest Articles