சுவிஸ் நிதி அமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர் அளித்த புகாரைத் தொடர்ந்து, பெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அவமதிப்பு மற்றும் அவதூறு தொடர்பாக ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, ஒரு X பயனர் க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருளைத் தூண்டி, கெல்லர்-சுட்டரை நோக்கிப் பாலின ரீதியான அவமதிப்புகளை வீசியதாக சோன்டாக்ஸ்ப்ளிக் செய்தி வெளியிட்டிருந்தது.
இதுபோன்ற பெண் வெறுப்பை இயல்பானதாகவோ அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவோ கருதக்கூடாது என்று அவரது செய்தித் தொடர்பாளர் செய்தித்தாள்களிடம், கூறியிருந்தார்.
விசாரணை எந்தத் திசையில் செல்லும் என்பது அரசு வழக்கறிஞரின் முடிவு என்று கெல்லர்-சுட்டரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமைச்சரின் குற்றவியல் புகார் “அடையாளம் தெரியாத நபர்களை” இலக்காகக் கொண்டுள்ளது.
எலான் மஸ்க்கின் X தளம் மற்றும் அவரது நிறுவனமான xAI ஆகியவற்றுக்கு எதிராக தற்போது அதிகாரப்பூர்வ விசாரணைகளை நடத்தும் ஒரே அமைப்பு பெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் மட்டுமல்ல.
கடந்த ஜனவரியில் க்ரோக்கின் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பாலியல் ரீதியான படங்கள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஆணையம் எலான் மஸ்க்கின் குழுமத்திற்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது.
மலேசியாவும் சமூக வலைத்தளமான X-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது.
மூலம்- swissinfo

