11.5 C
New York
Saturday, May 2, 2026

விளம்பரமற்ற பெர்ன் நகரம் – புதிய முயற்சி ஆரம்பம்.

சுவிஸ் தலைநகர் முழுவதும் அனைத்து வணிக விளம்பரங்களுக்கும் தடை விதிக்கக் கோரி நுகர்வோர் எதிர்ப்பு கூட்டணியினால் ஒரு மக்கள் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

‘விளம்பரமில்லா பெர்ன்’ என்ற இந்த முன்னெடுப்பு, வெளிப்புற சுவரொட்டிகள் மற்றும் வணிகத் திரைகளில் நுகர்வோர் சந்தைப்படுத்தலைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கலாசார சுவரொட்டிகள், பொது மற்றும் உள்ளூர் தகவல் விளம்பரப் பலகைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பொது இடங்களில் வணிகங்களின் செல்வாக்கைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று இந்த முன்மொழிவைத் தொடங்கியவர்கள் கூறுகின்றனர்.

2024-ல், பெர்ன் நகர மன்றம் விளம்பரங்களைத் தடை செய்யும் தீர்மானத்தை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொண்டது.

ஆனால், 2026-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டக் கலந்தாய்வின் போது, ​​தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய வருமானத்தை இழக்கக் கூடாது என்று ஆதரவாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

விளம்பர இட வாடகை மூலம் நகரத்திற்கு ஆண்டுதோறும் 5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles