15.7 C
New York
Sunday, September 27, 2026

மர்மப் பொருளினால் பரபரப்பு – குண்டு செயலிழக்கும் ரோபோவும் களத்தில்.

பெர்னில் உள்ள வாங்க்டோர்ஃபாலீயில் ​​விளையாட்டு மைதானத்தில் காணப்பட்ட ஒரு கருப்பு நிற மர்மப் பொருளினால் பதற்றம் ஏற்பட்டது.

பெட்டி இருந்த அந்த மர்மப் பொருள் குறித்து எழுந்த சந்தேகத்தை அடுத்து நேற்றுக்காலை சுமார் 10 மணியளவில், காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோவுடன் அங்கு வந்தனர்.

- Advertisement -

பின்னர், KPT காப்பீட்டுக் கட்டிடம் மற்றும் தபால் அலுவலகத் தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

அலுவலகம் மற்றும் அருகிலேயே அமைந்துள்ள பகல்நேரப் பராமரிப்பு மையம் என்பனவற்றில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சோதனைகளின் பின்னர், அபாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொட்டலத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. அந்தப் பொருளும் அதன் உள்ளடக்கங்களும் பாதிப்பில்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles