அமெரிக்காவின் பட்ரியாட் ஏவுகணைகளுக்குத் துணையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூடுதல் நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் முயற்சியில் சுவிஸ் அரசாங்கம், ஈடுபட்டுள்ளது. இதற்காக, அது நான்கு நாடுகளிடமிருந்து தகவல்களைச் சேகரித்து வருகிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு நாடுகளுடன், மேலும் ஐந்து உற்பத்தியாளர்களும் அணுகப்பட்டதாக, கூட்டாட்சி ஆயுத அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் காஜ்-குன்னார் சீவர்ட், தெரிவித்தார்.
ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு “தகவல் கோரிக்கைகளை” அனுப்பப்பட்டுள்ளது . விநியோக நேரம், செலவுகள், செயல்திறன் மற்றும் ஐரோப்பாவில், குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உற்பத்தியின் பங்கு ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாகும்.
இந்தத் தகவல்கள் மே மாத இறுதிக்குள் கிடைக்கும். இருப்பினும், இவை இன்னும் ஒரு முன்மொழிவாக அமையவில்லை என்றும், எனவே, இந்தக் கட்டத்தில் கூட்டாட்சி அரசாங்கம் மாதிரி குறித்து இன்னும் ஒரு முடிவை எடுக்காது என்றும் சீவர்ட் சுட்டிக்காட்டினார்.
எந்தெந்த உற்பத்தியாளர்கள் மற்றும் அமைப்புகள் குறிப்பாக இதில் ஈடுபட்டுள்ளன என்பது குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடப்படவில்லை.
மூலம்- swissinfo

