2025-ஆம் ஆண்டில், வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி குறைதீர்ப்பாளர் தெரிவித்துள்ளார். வங்கி அட்டைப் பணம் செலுத்துதல் மற்றும் இணையவழி வங்கிச் சேவைகள் தொடர்பான மோசடிகளே இதற்கான முக்கிய காரணமாகும்.
சுவிஸ் வங்கி குறைதீர்ப்பாளர் கடந்த ஆண்டு 2,575 வழக்குகளைக் கையாண்டார், இது முந்தைய ஆண்டை விட 4% அதிகம் என்று குறைதீர்ப்பாளர் ஆண்ட்ரியாஸ் பார்ஃபஸ் செவ்வாயன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.
பிராந்திய வாரியாக, 55% புகார்கள் ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்திலிருந்தும், 23% வெளிநாடுகளிலிருந்தும் வந்தன. பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்திலிருந்து வந்த கோரிக்கைகளின் வீதம் 19% ஆக ஏறக்குறைய நிலையாக இருந்தது. இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்திலிருந்து 3 வீதமாக மாற்றமின்றி இருந்தது.
90% வழக்குகளில், சர்ச்சைக்குரிய மதிப்பு 100,000 பிராங்கிற்கும் குறைவாக இருந்தது.
2025-ஆம் ஆண்டில், குறைதீர்ப்பாளரால் கையாளப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2024-ல் 270 ஆக இருந்ததை விட மீண்டும் அதிகரித்து 316 ஆக உயர்ந்தது.
அவற்றுள், ஃபிஷிங் மோசடிகள் மீண்டும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.
“சட்டப்படி, இவ்வகை வழக்குகளில் நிதி நிறுவனங்கள் பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டிருக்கவில்லை” என்று பார்பஸ் விளக்கினார். இருப்பினும், ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக ஆராயப்படுகிறது.
மூலம்- swissinfo

