15.7 C
New York
Sunday, September 27, 2026

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவிற்கு செருப்பு மாலை.

யாழ்ப்பாணம் – சின்னக்கடை சந்திப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து இன்று பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

10 அடி உயரமுடையதாக குறித்த பதாகை வைக்கப்பட்டிருந்தது. 

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல் உள்ளிட்ட பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் சூழலில் இவ்வாறான பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு காரில் வந்த இராமநாதன் அர்ச்சுனா அதனை அங்கிருந்து அகற்றி தமது காரில் எடுத்துச் சென்றுள்ளார். 

Related Articles

Latest Articles