14.6 C
New York
Sunday, September 27, 2026

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரணதண்டனை விதிப்பு.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

- Advertisement -

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்த போதிலும், அந்த புலனாய்வுத் தகவல்களை பறக்கணித்து, பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு பூஜித ஜயசுந்தர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று தமது தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் ஆரம்பத்தில், 2022ஆம் ஆண்டு பூஜித் ஜயசுந்தர நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, விசாரணையைத் தொடர உத்தரவிட்ட நிலையில் இன்றைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles